லாஸ்லியாவுக்கு டும் டும் டும் மாப்பிளை யார் தெரியுமா.? இதோ தகவல்

recent news about actress losliya marriage: பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமாகி தற்போது பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளவர் நடிகை லாஸ்லியா. இவர் இலங்கையில் இருந்து வந்திருந்தாலும் இவருக்கு தற்போது பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கவீனை காதலித்தார். அந்த காதல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்ததும் திருமணத்தில் தான் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அந்த காதலோ பிக்பாஸ் வீட்டிலேயே முடிந்துவிட்டது. அங்கிருந்து வெளியே வந்த அவர் கவின் மீது இருந்த காதலைப் பற்றி இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் வாயை திறக்கவில்லை.

இந்த நிலையில் லாஸ்லியாவிற்கு  திருமணம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த திருமணம் அவரின் பெற்றோர் பார்த்து முடிவு செய்த திருமணமாம்.

அதாவது லாஸ்லியாவின் தந்தையின் கனடாவைச் சேர்ந்த நெருங்கிய நண்பரின் மகனை தான் இவருக்கு பேசி முடித்து உள்ளார்களாம், தற்போது இப்படி ஒரு செய்தி இணையதளங்களில் கசிந்து வருகிறது. ஆனால் இது  உண்மையா பொய்யா என்பது விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment