இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து வெளியான புதிய தகவல்.!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வெளியான இந்தியன் படம் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது மிகா தீவிரமாக உருவாகி வருகிறது.இதனை தொடர்ந்து படபிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் கமலுடன் சேர்ந்து பல முன்னணி நடிகைகள் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தபோது ஏற்பட்ட சில பல பிரச்சனைகள் காரணமாக பாதியில் படத்தை நிறுத்தி விட்டனர். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தற்போது நடிகர் கமல் மற்றும் காஜல் அகர்வாலின் காட்சிகள் பீகாரில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமல்லாமல் பிளாஷ்பேக் காட்சிகளும் தற்போது படமாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

ஜனவரி மாதம் தொடங்கும் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடக்க உள்ளது அதுவும் திருப்பதியில் அடுத்தகட்ட படபிடிப்பு தொடங்க உள்ளது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் எனவும் தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் கமல் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

இதனை தொடர்ந்து பிக் பாஸை தொகுத்து வழங்கியவரும் கமலஹாசன் பிக்பாஸிலும் பிஸியாக இருந்து வருகிறார் இந்தியன் 2 படத்திலும் பிசியாக இருந்து வருகிறார். இதனால் இரண்டிற்கும் காலம் நேரம் சீராக ஒதுக்கி இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கமலஹாசன்.

Leave a Comment