மறைந்த நடிகை விஜே சித்ராவின் “கால்ஸ்” திரைப்படம்.! பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.! எந்த தேதி, எந்த நேரம் தெரியுமா.? ரசிகர்களே நோட் பண்ணிகோங்க..

சின்னத்திரையில் ஒரு நடிகை கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் என்றால் அந்த பெருமை மறைந்த நடிகை விஜே சித்ராவையே சாரும்.

சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றும், டான்சர் ஆகவும் பணியாற்றி பின் படிப்படியாக சின்னத்திரை சீரியலில் நுழைந்தார்.

யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சின்னத்திரை சீரியல் மூலம்தான் விஜே சித்ரா அசுர வளர்ச்சியை எட்டினார்.பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவரது கதாபாத்திரம் காதல் கலந்து இருந்ததால் இல்லத்தரசிகளையும் தாண்டி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது.

இவரது வளர்ச்சியை அவரே தனது சமூக வலைத்தளத்தில் கண்டு பெருமைப்பட்டார் மேலும் ரசிகர்கள் பட்டாளத்தை பெரிய அளவில் உருவாகி கொண்டே சினிமாவில் நடிப்பதையே பெரிதும் விரும்பினார் விஜே சித்ராவுக்கு மேலும் போட்டோ சூட்கள் பெரிதும் உதவின.

அதன் காரணமாக வெள்ளித்திரையில் இவருக்கு கால்ஸ் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அதனால் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் வெற்றி கொடியை நாட்டினார் மேலும் மீதி நேரங்களில் போட்டோ சூடும் நடத்தி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் அது கொலை தான் என அவரது தீவிர ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் குரலெழுப்ப அது பெரிய அளவில் வைரலானது.

இதுவரை இந்த விசாரணையை நடைபெற்றுக் கொண்டு வந்தாலும் ரசிகர்கள் விஜய் சித்திராவின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரைப் பற்றிய செய்திகளை சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் விஜே சித்திரா வெள்ளித்திரையில் நடித்த கால்ஸ் திரைப்படம் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

அதாவது கால்ஸ் திரைப்படம் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை 3.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது சித்ரா ரசிகர்களே மறந்துவிடாதீர்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment