மறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.!! குஷியில் ரசிகர்கள் எமோஷனலாக பதிவிட்டு வருகின்றனர்.

0

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சேதுராமன். இந்த படத்தை தொடர்ந்து பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். அதுமட்டுமல்லாமல் இவர் தோல் மருத்துவராகவும் பணிபுரிந்து வந்தார்.

மேலும் இவர் யூடியூப் சேனல்களிலும் தோல் சம்மந்தமான மருத்துவ குறிப்புகளை வீடியோவாக வெளியிட்டு வந்து பிரபலமானார். இவர் நடிகர், நடிகைகள் என பலருக்கு தோல் ரீதியான மருத்துவ ஆலோசகராகவும் இருந்தார்.

இவர் கடந்த மார்ச் மாதம் திடீரென இயற்கை எய்தினார். அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேதுராமன் உமையாளுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது அவர்கள் குடும்பத்தினர் ஒரு இன்பகரமான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

சேதுராமனின் மனைவி உமையாள் நேற்று முன்தினம் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார். அதை அறிந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் வயது மட்டுமே மாறியுள்ளது. இனி உன்னை குட்டி சேது என அழைக்க போகிறோம் என இந்த சந்தோஷமான செய்தியை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தற்போது இந்த செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் எமோஷனலாக பதிவிட்டு வருகின்றனர்.