அசிஸ்டன்ட் டைரக்டர் என்று பார்க்காமல் பீர் வாங்கி கொடுப்பார் அஜித்.! ஆசை படத்தின் சீக்ரெட் சொன்ன மாரிமுத்து

Ethirneechal Marimuthu: எதிர்நீச்சல் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்த மாரிமுத்து இன்று திடீரென மாரடைப்பால் மறைந்த செய்தி பலரையும் சோகத்தினால் அழுத்தி உள்ளது. இவருடைய மரண செய்தி வைரலாக ஆரம்பத்தில் யாராலும் நம்ப முடியவில்லை பிறகு மருத்துவமனையில் இருந்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருப்பதை பார்த்த பிறகு தான் அனைவரும் நம்பி உள்ளனர்.

உதவி இயக்குனராக சினிமா பயணத்தை தொடங்கிய மாரிமுத்து அஜித்தின் ஆசை படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து பேட்டி ஒன்று சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார் அது குறித்து பார்க்கலாம். அஜித் நடிப்பில் வெளியான ஆசை திரைப்படத்தின் இயக்குனர் வசந்த் ரவி இயக்க அதில் உதவிய இயக்குனராக நடிகர் மாரிமுத்து, எஸ்.ஜே சூர்யா பணியாற்றினர்.

மாரிமுத்து கூறியதாவது, மதுரையின் தேனி மாவட்டத்தில் ஒரு குக் கிராமத்தில் பிறந்த என்னால் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை விதித்தவர்கள் எங்க ஊரு பக்கத்தில் பிறந்து சென்னைக்கு வந்து சினிமாவில் சாதித்தவர்கள் ஆன பாரதிராஜா, வைரமுத்து போன்றவர்கள் தான்.

கமலஹாசனை விட எனக்கு நடிகர் வடிவேலு தான் சிறந்த நடிகர் என்றும் அவர் காமெடி நடிகர் மட்டுமல்ல காமெடி விஞ்ஞானி என பேசிய மாரிமுத்து இருவரும் ஒன்றாகத்தான் ஊரில் இருந்து ஓடி வந்து ராஜ்கிரண் சாரின் ஆபீஸில் ஒரே பாயில் படுத்து தூங்கி சினிமாவில் பயணத்தை ஆரம்பித்தோம் என்றார்.

மேலும் நடிகர் அஜித் பற்றி கூறிய இவர், பொய்யாக ஒருவர் புகழ்கிறார் என்றாலே அவரது பேச்சைப் பார்த்து கண்டுபிடித்து விடுவார் அஜித். அவரை அதற்குப் பிறகு பக்கத்திலேயே சேர்க்க மாட்டார் உண்மையாக பேசுபவர்களை மட்டுமே தனக்கு பக்கத்தில் வைத்திருப்பார். அப்படி ஒரு நல்ல குணம் கொண்டவர் அஜித் ஆசை படத்தின் ஷூட்டிங் என்பது பைக்கில் தான் வருவார்.

திலோத்தமா, புல்வெளி உள்ளிட்ட பாடல்களை ஊட்டியில் தான் சூட்டிங் எடுத்தோம் அசிஸ்டன்ட் டைரக்டர்களான எங்களுக்கு ரகசியமாக பீரெல்லாம் வாங்கி கொடுப்பார். என்னை பைக்கில் எல்லாம் ஏற்றுக் கொண்டு சென்றிருக்கிறார். அவரது நல்ல மனசுக்கு சினிமாவில் இவர் அடைந்திருக்கும் உயரமே சாட்சி என மாரிமுத்து கூறியுள்ளார். இன்றோடு ஆசை திரைப்படம் வெளியாகி 28 வருடங்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் இவ்வாறு மாரிமுத்து உயிர் பிரிந்தது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.