#PRODUCTION NO10 என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் லாஸ்லியா.!! ஹீரோ யார் என்று நீங்களே பாருங்கள்? வைராகும் புகைப்படம். .

பிக்பாஸ் மூலம் அறிமுகமாகி தற்போது 2 திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருபவர் லாஸ்லியா.  பிக்பாஸ் மூலம் இவருக்ககென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. பிக்பாஸில் இருக்கும் போது இவருக்கும் கவினுக்கும் காதல் என்று பேசப்பட்டு வந்தது. முதலில் அப்படித்தான் இருந்தனர்.

ஆனால் பிக்பாஸிலிருந்து வெளிவந்த பிறகு அவரவர் அவர்கள் வேலையை பார்க்க ஆரம்பித்தனர். கவினும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதுபோல லாஸ்லியாவும் பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் ஹர்பஜன்சிங் உடன் இணைந்து நடிக்க கமிட் ஆனார். அதுமட்டுமல்லாமல் ஆரியுடன் இணைந்து மற்றும் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது இவர் மூன்றாவதாக ஆக்சன் பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் தயாரிக்கும் புரோடக்சன் நம்பர் 10 என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் இவருக்கு கதாநாயகனாக புதுமுக நடிகரான பூரானேஷ்  என்பவர் நடிக்க இருக்கிறார்.

இத்திரைபடத்தில் புதுமுக இயக்குனரான ஜெ எம் ராஜா சரவணன் என்பவர் இயக்கயிருக்கிறார். இந்த படத்தை டில்லிபாபு தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

actress losliya
actress losliya
losliyamariiya
losliyamariiya

Leave a Comment