பள்ளியில் படிக்கும் பொழுது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் லாஸ்லியா.! இணையத்தில் அதிரடியாக வெளியான புகைப்படம்.!

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த பின்பு தமிழ் சினிமாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பங்கேற்று தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் லாஸ்லியா இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விலங்கிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது ஆம் இந்த திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது நடிகர் அர்ஜுன் மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரண்ட்ஷிப் திரைப்படத்தை தொடர்ந்து இவர் தற்பொழுது ஒரு சில திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் என்ற தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பார் என பலவிதமான கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் தற்போது இவரது பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது லாஸ்லியா பேச்சிபோட்டி அல்லது பேசும் பொழுது எடுத்த புகைப்படம் போல் இருப்பதால் பலரும் இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து லாஸ்லியா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் இவருக்கும் பட வாய்ப்பு வேண்டும் என்பதால் இவரும் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அவ்வாறு வெளியிடுவதன் மூலம் பட வாய்ப்பு கிடைக்கிறதா எனவும் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment