நடிகர் கருணாசுக்கு ஜோடியாக நடிக்கும் லட்சுமி மேனன்!! வைரலாகும் புகைப்படம்.

0

lakshmimenon with karunas photo: கருணாஸ் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திண்டுக்கல் சாரதி, இந்தத் திரைப்படத்தில் உள்ள பாடல்கள் மற்றும் காமெடி என அனைத்தும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் படம் அந்த அளவுக்கு ஓடவில்லை.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் கருணாஸ் மற்றும் லக்ஷ்மி மேனன் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் திண்டுக்கல் சாரதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எடுக்கப்பட்ட புகைப்படம் என சிலர் கூறுகின்றனர்.

மேலும் இது குறித்து நடிகை லட்சுமி மேனனிடம் விசாரித்தபோது இந்த தகவல் பொய்யானது எனவும் இந்த புகைப்படம் கொம்பன் திரைப்படத்தின் பட சூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் அது மட்டுமல்லாமல் தற்போது நடிகை லட்சுமிமேனன் இயக்குனர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்துக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த  புகைப்படம்.

lakshmmimenon 2
lakshmmimenon 2