3 வருடம் கழித்து மீண்டும் சினிமாவில் களமிறங்கும் லக்ஷ்மி மேனன்!! ஷாக்காகும் நடிகைகள்!!

லட்சுமி மேனன் கேரளாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் சசிகுமாரின் சுந்தரபாண்டியன் படத்தில் அறிமுகமாகி பின்பு பிரபு சாலமனின் படமான கும்கியில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்தார்.இந்த படங்கள் மூலமாக  ரசிகர் மனதில் இடம் பிடித்தது மட்டுமில்லாமல், தமிழ் திரைஉலகில் முன்னனி நடிகையாகவும் வளம்வர தொடங்கினார்.

பின்னர் நடிகர் விஷாலுடன் நான் சிவப்பு மனிதன் என்ற படத்தின் மூலம் தன் திறமையை வெளிப்படுத்தினார்.  மேலும் இவர் குட்டிப்புலி, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் போன்ற படங்களில் தன் சிறந்த நடிப்பை காட்டியுள்ளார். பின்னர் அவரது உடல் எடை அதிகரித்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. மீண்டும் இவர் தன் உடல் எடையை குறைத்து பிரபுதேவாவுடன் யங் மங் சங் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. பட வாய்ப்புகள் இல்லாததால் இவரது கவனம் படிப்பில் திரும்பியுள்ளது.

lakshmi

இவர் தற்போது சோஷியாலஜி டிகிரியும் மற்றும் குச்சிப்புடி டிப்ளமோ போன்ற படிப்பும் படித்து வருகிறார். என்னதான் படித்து வந்தாலும் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி ஆவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து உள்ளாராம்.

Leave a Comment