3 வருடத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் லட்சுமிமேனன் எந்த நடிகருடன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இளம் புயலாக வந்த நடிகை லட்சுமி மேனன். தமிழில் இவர் பிரபு மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர். கும்கி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று பல விருதுகளையும் பெற்றது, இந்த திரைப்படத்தை தொடர்ந்து லட்சுமிமேனன் சுந்தரபாண்டியன், பாண்டியநாடு. நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதன் பிறகு தமிழில் ஒரு ரவுண்டு வந்து முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சில திரைப்படங்களை மட்டுமே நடித்து வந்தார். ஆரம்ப காலத்தில் இவர் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து விட்டு திடீரென மாடன் உடைக்கு மாறினார். ஆனால் இவருக்கு அது செட் ஆகாததால் படவாய்ப்பு வருகை குறைந்தது.

கடைசியாக இவர் விஜய் சேதுபதியின் ரெக்கை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இவரின் உடல் பருமான், அதிகரித்ததால் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து கொண்டே போனது பின்பு சினிமாவை விட்டு விலகி ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தார். இந்த நிலையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு லட்சுமிமேனன் மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமா உலகிற்கு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவர் இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, ஏற்கனவே லட்சுமிமேனன் முத்தையா இயக்கத்தில் கார்த்தியுடன் கொம்பன் திரைப்படத்திலும் சசிகுமாருக்கு ஜோடியாக குட்டி புலி திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கௌதம் கார்த்திக் லட்சுமிமேனன் சேர்ந்து நடிக்கும் திரைப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment