தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கமலஹாசன் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் மேலும் இயக்குனர் சங்கர் மற்றும் கமலஹாசனின் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக இந்தியன் 2 திரைப்படம் உருவானது இந்த திரைப்படத்தினை பல கோடி செலவில் லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருந்தது இந்த திரைப்படம் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சில விபத்தின் காரணங்களாக பாதிலேயே விடப்பட்டது.
மேலும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட மூவர் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதன் காரணமாக இயக்குனர் சங்கர் மற்றும் லைகா ப்ரொடக்ஷன், கமலஹாசன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. மேலும் இத்திரைப்படம் இவ்வாறு பாயிலே நிற்பதற்கு முக்கிய காரணம் இயக்குனர் சங்கர் கேட்ட பட்ஜெட்டை லைகா நிறுவனம் கொடுக்க மறுத்ததாகவும் மேலும் நாங்கள் கூறும் பட்ஜெட்டுக்குள் முடித்து வர வேண்டும் என்பதை வற்புறுத்தினார்கள்.
இதன் காரணமாக இயக்குனர் சங்கர் இதற்கு மேல் திரைப்படத்தை இயக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியிருந்தது மேலும் இவர்களிடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற பொழுதும் பலனளிக்காமல் நீதிமன்றம் வரை சென்றுது. இப்படிப்பட்ட நிலையில் சங்கர் தற்பொழுது தெலுங்கில் ராம்சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்சி 15 லட்சம் திரைப்படத்தை இயக்கிய தொடங்கினார்.
கமல்ஹாசனுடைய சொந்த தயாரிப்பில் விக்ரம் படத்தில் பிஸியானார் மேலும் ஆர்சி 15 திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று உள்ள நிலையில் விரைவில் முடியை இருக்கிறது.மேலும் கமலஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து மீண்டும் இந்தியன் 2 திரைப்படம் தொடங்குவதற்க்கு முக்கிய காரணம் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் தயாரிப்பு பணியில் இணைய விருப்பம் தெரிவித்ததால் லைகா நிறுவனமும் ஓகே சொல்லிவிட்டது.
மேலும் தற்பொழுது விரைவில் படப்பிடிப்பு பணிகளை துவங்குவதற்காக முடிவெடுத்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தன்னுடைய புதிய திரைப்படத்தின் நடிப்பதற்கான பணிகளை தொடங்கி விட்டார் எனவே அமெரிக்கா சென்று உள்ளார். இவர் இந்தியா திரும்பிய பிறகு ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னையில் இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது மேலும் இதில் கமலஹாசன் இல்லாத காட்சிகள் மட்டுமே படமாக்கப்படுகின்றனர்.