இந்தியன் 2 படம் தாமதம் ஆனதற்கு முக்கிய காரணமும் லைக்கா.? கமலுக்கும் பங்கு உண்டு? இயக்குனர் பதில் மனு.

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பிற்கு பேர் போனவர் என்பது குறிப்பிடதக்கது ஏனென்றால் தமிழ் திரையுலகில் போடாத கெட்டப் கிடையாது அந்த அளவிற்கு திரை உலகை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார்.

இவர் படங்கள் ஒவ்வவென்றும் பல்வேறுவித்தியாசமாகவும், புதியதும் கலந்து இருப்பதால் தற்போது வரும் இளம் தலைமுறையினருக்கு  நடிகருக்கும், ரசிகர்களுக்கும் உத்வேகம் கொடுக்க கூடிய நடிகராக இருந்து வருகிறார் இருப்பினும் சமீபகாலமாக இவர் திரையில் நடிக்கவில்லை அதற்கு மாறாக அரசியல் களம் கண்டார்.

இந்த மாதிரியான சூழலில்தான் லைக்கா நிறுவனம் மற்றும் சங்கர் ஆகியோர் இணைந்து இந்தியன் 2 படத்தை தயாரிக்க முடிவு எடுத்தது இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டார்.

படத்தின் சூட்டிங் தயாராகி விறுவிறுப்பாக நடைபெற்றது இருந்தாலும் சில இடையூறுகள் ஏற்பட்டது அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்து காரணமாக சில முக்கிய உதவி அசிஸ்டன்ட் கள் உயிரிழந்தனர்.

அதன் காரணமாக சில காலங்களில் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது மீண்டும் தொடங்க லைகா நிறுவனம் இறங்கினாலும் அது பலனளிக்கவில்லை இந்த நிலையில் சங்கர் வேறு வழியில்லாமல் ராம்சரண் தேஜா நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்க சென்று விட்டார் கமலும் மறுபக்கம் அரசியல் பக்கம் சென்றால் லைகா நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட் போட்டு தலை கால் புரியாமல் சுத்தியது.

ஒரு கட்டத்தில் வழக்கில் பார்த்துக்கொள்ளலாம் என தயாரிப்பு நிறுவனம் இறங்கியது. சங்கர் மற்றும் லைக்கா நிறுவனம் இரு தரப்பினரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். அந்த பேச்சுவார்த்தையில் லைகா நிறுவனத்துக்கு உடன்பாடு இல்லாததால் வழக்கை மீண்டும் மாற்றியது.

அதில் தனது மனுவில் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படம் தாமதத்தை லைக்கா நிறுவனமே காரணம் என்றும் மற்றொரு காரணம் கமலுக்கு இந்த படத்தில் மேக்கப் போடும்போது அலர்ஜி ஏற்பட்டதாலும் தாமதம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு மிக விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Comment