ஷங்கருக்கு புதிய தலைவலியைக் கொடுக்கும் லைக்கா நிறுவனம் – இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் குறைப்பு.? சோகத்தில் படக்குழு..

உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்தடுத்த திரை படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் அந்த வகையில் கமலஹாசன் கையில் இந்தியன் 2,  தேவர் மகன் 2, விக்ரம் 3 என அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கின்றன.

முதலாவதாக கிடப்பில் கிடக்கும் இந்தியன் 2 திரைப்படத்தையே முடிக்க கமல் அதிகம் ஆர்வம் காட்டுவார் என தெரியவருகிறது மேலும் லைக்கா நிறுவனமும் இந்த படத்திற்காக ஏற்கனவே சுமார் 100 கோடிக்கு மேல் செலவு செய்து விட்டதாம்.

இந்த படத்தை முடிக்க  லைக்கா நிறுவனமும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது முதலில் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 350 கோடி என பேசப்பட்டது. ஆனால் படம் இழுபறியில் பலநாள் கடந்ததால் லைக்கா நிறுவனத்திற்கு ஏகப்பட்ட நஷ்டம் இதனால் லைகா நிறுவனம் இந்தியன் 2 திரைப்படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க பேசிய கொண்டு வருகிறது.

அதனால் ஒரு தடவை கலந்து பேசி 250 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை எடுக்க வேண்டும் என பேசி உள்ளனர் தற்போது அதையும் குறைத்து 225 கோடி இந்த படத்தை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என தயாரிப்பாளர் கூறியுள்ளாராம். படத்தின் பட்ஜெட் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்க  காரணம் இந்தியன் 2  படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

மறுபக்கம் லைக்கா நிறுவனம் பொன்னியின் செல்வன் 1 அதன் இரண்டாவது பாகம் என அடுத்தடுத்து பல்வேறு படங்களை தயாரிப்பதால் தற்போது பண கஷ்டத்தில் லைக்கா நிறுவனம் இருப்பதாக கூறப்படுகிறது இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் கம்மியானால் சீக்கிரமாகவே எடுத்து விட முடியும் என தயாரிப்பாளர் சைடுல இருந்து பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.

Leave a Comment