எதிர்பார்த்த இடத்தில் வசூலில் பின்தங்கிய வலிமை – எந்த இடத்தில் தெரியுமா.? சோகத்தில் போனி கபூர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகி ரசிகர்களையும், பொதுமக்களையும் கொண்டாட வைத்துள்ளது அந்த அளவிற்கு வலிமை திரைப்படத்தில் ஆக்சன், சென்டிமெண்ட், த்ரில்லர் என அனைத்தும் உள்ளதால் அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது மேலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றன.

மேலும் படக்குழு எதிர்பார்த்தபடி வசூலிலும் அடித்து நொறுக்கி வருகிறது 5 நாட்களில் மட்டுமே சுமார் 150 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் பல்வேறு டாப் நடிகர்களின் படங்களின் வசூலை முறியடித்து முன்னேறிக்கொண்டே இருக்கிறது அஜித்தின் வலிமை இப்படி இருந்திருந்தாலும் ஒரு இடத்தில் மட்டும் மரண அடியை வாங்கியுள்ளது.

போனி கபூர் அஜித்தின் வலிமை திரைப்படத்தை முதல் முதலாக தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் டப் செய்தார் இதில் ஆந்திராவிலும்,  தெலுங்கிலும் ஓரளவு அவர் நினைத்த வசூலை பெற்றுக்கொடுத்து ஆனால் இந்தியில் மட்டும் மரண அடியை வாங்கியுள்ளது அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படம் ஹிந்தியில் மட்டுமே 100 கோடியை அள்ளிய சாதனை படைத்தது.

அதுபோல வலிமை படமும் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளும் என நம்பி தான் போனிகபூர் அங்கு ரிலீஸ் செய்தார் ஆனால் வலிமை படம் இதுவரை அங்கு 3 கோடியை மட்டுமே பள்ளி உள்ளது ஆனால் ஹிந்தி டப்பிங்கில் 5 கோடியை அள்ளியது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

போனிகபூர் எதிர்பார்த்த வசூல் ஹிந்தியில் நடக்காததால் செம வருத்தத்தில் இருக்கிறார் இருப்பினும் மற்ற இடங்களில் எதிர்பார்க்காத வசூலை கண்டு வருவதால் ஒரு பக்கத்தில் அவருக்கு நல்ல செய்தியை கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment