சினிமாவையும் தாண்டி வேறு ஒரு தொழிலில் முதலீடு செய்த லேடி சூப்பர்ஸ்டார்.! என்ன தொழில் தெரியுமா.?

சினிமா துறையில் இருப்பவர்கள் எப்பொழுதும் சினிமாவைப் பற்றி மட்டுமே பேசுவது மற்றும் சினிமாவில் எப்படி தன்னை மேல் நோக்கி எடுத்துச் செல்ல முடியும் என்பதை நினைப்பார்கள். ஆனால் ஒரு சிலரோ அதிலிருந்து மாறுபட்டு எல்லா தொழிலிலும் தான் உச்சத்தில் இருக்கவேண்டும் என்பது வழக்கம்.

ஒரு சில பிரபலங்கள் இதுபோன்று செய்வது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும் அந்த வகையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தென்னிந்திய திரை உலகில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருவதால் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தினாலும் வாய்ப்புகள் மட்டும் குறையாமல் கிடைகின்றன.

மேலும் பல்வேறு திரைப்படங்களில் நடிக்கிறார் அந்த வகையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு தற்போது நெற்றிகண் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது இப்படி தொடர்ந்து நிறைய படங்களை தன்வசப்படுத்தி ஓடிக்கொண்டிருக்கும் நயன்தாரா. சமிப காலமாக நயன்தாரா செய்திகள் அவ்வப்போது வெளிவரும் அதுபோல தற்போது ஒரு சூப்பரான செய்து ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து “சாய்வாலே” (chai waale). நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

Leave a Comment

Exit mobile version