தனது காதலனுக்கு புதிய பட்டம் கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.? துள்ளும் விக்னேஷ் சிவன்.

தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆன நாளில் இருந்து தற்பொழுது வரையிலும் திரையுலகில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் அதனால் நயன்தாராவின் மார்க்கெட்டும் உச்சத்தை எட்டியது.

நயன்தாரா சினிமா உலகில் எடுத்தவுடனேயே டாப் நடிகரான சரத்குமாருடன் கை கோர்த்த பிறகு ஒரு ஆசை உற்சாகத்துடன் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அதற்கு ஏற்றவாறு சரியாக காய் நகர்த்தி சினிமாவுலகில் பொறுமையாக இருந்து.

அஜித், விஜய், சூப்பர் ஸ்டார் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தன்னையும் மிகப்பெரிய ஒரு பிரபலமாக மாற்றிக்கொண்டார் அன்றிலிருந்து இன்று வரையிலும் நம்பர்-1 நடிகையாக இருந்து வருகிறார். ரஜினியின் அண்ணாத திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நயன்தாரா அடுத்ததாக மீண்டும் தனது காதலனுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் காமெடி மற்றும் ரொமான்ஸ்சை மையமாக வைத்து உருவாகி வருகிறது. படத்தின் படபிடிப்பு மிக விரைவாக எடுக்கப்பட்டு வருகிறது படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் இரண்டாவது கட்ட பாடல் வெகுவிரைவிலேயே வெளிவர இருக்கிறது. இது குறித்து ஒரு சூப்பர் அப்டேட்டில் சொல்லி உள்ளார் நயன்தாரா அதாவது விக்னேஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 18ம் தேதி டூ..டூ.. டூ என்ற பாடல் வெளியாகும் என தெரிவித்தார்.

மேலும் தனது காதலன் விக்னேஷ் சிவனை தனக்கு பிடித்த அன்பான டைரக்டர் என குறிப்பிட்டு பேசியுள்ளார். இதனால் நயன்தாரா தனது காதலனுக்கு புதுவிதமான ஒரு பட்டத்தை கொடுத்துள்ளார். இத்தனை தற்பொழுது நயன்தாரா ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில்கொண்டாடி வருவதோடுசமூக வளைதளப்பக்கத்தில் பரப்பி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version