தாயின் பிறந்தநாளை கோவாவில் குதுகலமாக கொண்டாடிய நயன்தாரா!! வைரலாகும் புகைப்படம்.

0

nayanthara’s mother birthday celeebration photo viral:லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அண்ணாத்த, மூக்குத்தி அம்மன், காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் போன்ற திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக கேரளாவிற்கு தனி விமானம் மூலம் சென்று இருந்தார். விக்னேஷ் சிவன் நயன்தாரா மற்றும் நயன்தாரா அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

பின்பு அங்கிருந்து சுற்றுலாவிற்கு கோவாவிற்கு நயன்தாரா உடன் சென்றிருந்தார். அங்கு நயன்தாரா  நீச்சல் குளத்தை கடந்து செல்வது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு உண்மையாகவே பல மாதங்களுக்குப் பிறகு வெக்கேஷன் வந்துள்ளோம் என பதிவிட்டிருந்தார்.

தற்போது இவர்கள் அங்கு நயன்தாராவின் அம்மா பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். மேலும் அங்கு விக்னேஷ் அவனது அம்மாவும் அவர்களுடன் இணைந்து உள்ளார். கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் இந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

இவர் பதிவிட்ட அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உங்கள் மொபைல் சரி இல்லையா சொல்லுங்கள் நான் தருகிறேன் எனவும்  கூறியிருக்கிறார். ஏன் தெளிவான புகைப்படத்தை பதிவிடவில்லை என கேட்டு இருந்தனர். அதுமட்டுமல்லாமல் பலர் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

nayan
nayan