முதலாம் ஆண்டு திருமண நாளை குழந்தைகளுடன் கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்..! பைரலாகும் புகைப்படம்

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக ஓடிக் கொண்டிருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. இவர் முதலில் மலையாளத்தில் நடித்து வந்தார் பிறகு தமிழில் “ஐயா” என்னும் படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர் மேலும் வாய்ப்புகளும் குவிந்தது.

அதுவும் எப்பேர்ப்பட்ட வாய்ப்புகள் என்றால் டாப் நடிகர்களுடன் அடுத்தடுத்த நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அந்த வகையில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார்.

ஒரு கட்டத்தில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் படங்களில் நடித்து அசத்தினார். இப்படிப்பட்ட நடிகை நிஜ வாழ்க்கையில் மட்டும் அடுத்தடுத்த பிரச்சனை மற்றும் சர்ச்சைகளை சந்தித்தார். இந்த சமயத்தில் தான் “நானும் ரவுடி” படத்தில் நடித்து வந்தார் அப்பொழுது விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பிட்டு ஆறு வருடங்களுக்கு மேல்..

காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி அனைவரது முன்னிலையிலும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றன. தற்போது சினிமா, குடும்பம் என இரண்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது இதனால் நயன்தாராவுக்கு நாலு பக்கமும் காசுகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.

nayanthara
nayanthara

பட வாய்ப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது கைவசம் ஜவான், இறைவன், டெஸ்ட், நயன்தாரா 75 போன்ற படங்களில் நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாரா திருமணம் செய்து கொண்டு ஒரு வருடம் ஆகியதை அடுத்து குழந்தைகளுடன் சேர்ந்து நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்..

nayanthara
nayanthara