பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டாராக ஆக நினைக்கும் பிரபல வாரிசு நடிகை!! நயன்தாராவின் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய போறாங்களாம்!! கை கொடுக்குமா பாப்போம்..

0

lady super star nayanthara movie remake in hindhi: தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் அப்போது உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து கனவுக்கன்னியாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் பாலிவுட் சினிமா தயாரிப்பாளரான போனிகபூர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். ஸ்ரீதேவிக்கு தனது மூத்த மகள் ஜான்வி கபூர் நடிகையாக வேண்டுமென்பதில் ஆர்வம் அதிகம். எனவே அவரின் அம்மாவின் ஆசைக்காக மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது தாயைப் போலவே சிறந்த நடிப்பை வெளிக் காட்டி வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் கவர்ச்சி, நடனம் என அனைத்து திறமைகளும் இவரிடம் உள்ளது என பேசப்படுகிறது. அவர் சமீபத்தில் வெளிவந்த குஞ்சன் சக்சேனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதனை தொடர்ந்து நடிகை ஜான்வி கபூர்  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, யோகி பாபு நடித்திருந்தனர். இந்த திரைப்படம் 2018 ஆம் ஆண்டு பாக்ஸ் ஆபீசை தெரிக்கவிட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்த திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை பாலிவுட் அறிமுக இயக்குனரான சித்தார்த் செங்குத்தா என்பவர் இயக்கவிருக்கிறார்.  மேலும் இந்த திரைப்படத்தை ஆனந்த் எல் ராய் என்பவர் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.