ரொமான்டிக்காக லைட் செட்டிங், இசைக்கச்சேரியுடன் காதலரின் பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாரா.!! வைரலாகும் வீடியோ.

0

lady superstar nayanthara celebrating vignesh shivan birthday video: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது அண்ணாத்த, காத்து வாக்கில் ரெண்டு காதல், நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் கைவசம் இன்னும் நிறைய திரைப்படங்கள் உள்ளது.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தது உலகம் அறிந்தது இவர்கள் இருவருமே ஒரே வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என ரசிகர்கள் கேட்கும் போது காதல் வாழ்க்கை போரடித்துப் போனால் திருமணம் செய்து கொள்வோம் என கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் நயன்தாராவிற்கு தோஷம் இருக்கிறது. அதற்காக காளகஸ்தி, திருநாகேஸ்வரம், கும்பகோணம் போன்ற கோவில்களுக்கு சென்று வந்ததன் பிறகு திருமணம் நடக்க உள்ளதாக கூறியுள்ளனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கி இருந்த இவர்கள் ஓணம் பண்டிகைக்காக தனது சொந்த ஊரான கேரளாவுக்கு தனி விமானம் மூலம் விக்னேஷ் சிவன் உடன் சென்றிருந்தார். பின்பு ஊரடங்கு முடிந்ததும் அங்கிருந்து இருவர் குடும்பத்துடனும் கோவாவிற்கு சுற்றுப்பயணம் சென்றனர்.

அங்கு 2 நாட்களுக்கு முன்பு நயன்தாரா அம்மா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடினார்கள். நயன்தாரா தனது காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை நேற்று மிகவும் குதூகலமாக கொண்டாடியுள்ளார். அவர்கள் நேற்று வெகு சிறப்பாக பாட்டுக் கச்சேரி, லைட் செட்டிங் என கொண்டாடினர்கள். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

❤️🖤

A post shared by nayanthara (@nayantharah) on