வெளியானது விஜய்சேதுபதியின் லாபம் ட்ரைலர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்  விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஏறக்குறைய 15 திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று அதில் 5 திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசிர்க்கு தயாராக உள்ளது.

இந்த ஐந்து திரைப்படங்களில் ஒன்றுதான் தற்போது நடித்து முடித்துள்ள  லாபம் திரைப்படம். இந்த திரைப்படத்தை  மறைந்த இயக்குனர் ஜனநாதன் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படம் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி வெளியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தை பிரமொட் செய்யும் விதமாக இரண்டாவது டீசரை படக்குழுவினர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

laabam
laabam

விஜய் சேதுபதி அவர்கள் அடுத்ததாக விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் மூன்று சின்னத்திரை நடிகைகளும் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் விக்ரம் படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று கூறலாம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment