தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் அரைடஜன் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி, இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் மூன்று திரைப்படங்கள் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகி விட்டது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் லாபம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரியில் ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சுருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரியில் நடைபெற்று வருவதால் அந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கிராம மக்களுக்கு சென்றுள்ளது அதனால் விஜய்சேதுபதியை எப்படியாவது பார்த்தாக வேண்டும் என மிகுந்த ஆர்வத்துடன் படப்பிடிப்பு தளத்திற்கு கிராம மக்கள் குவிந்தனர்.
கூட்டத்தைப் பார்த்த படக்குழு திணறியது, அதுமட்டுமல்லாமல் நாளுக்கு நாள் விஜய்சேதுபதி காண ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது, மேலும் படப்பிடிப்பு தளத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு ஏற்கனவே நிபந்தனை விடுத்துள்ளது இந்த நிலையில் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் குவிந்ததால் படக்குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினார்கள்.
அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பை காண வந்த ரசிகர்கள் பலரும் முக கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டங்கூட்டமாக வந்துள்ளார்கள். இதனால் அங்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது இந்த நிலையில் விஜயசேதுபதி மற்றும் சுருதிஹாசனை பார்க்க குவிந்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து லாபம் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து உள்ளார்கள்.
அதன் பிறகு படபிடிப்பு மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
