புதிதாக வாங்கிய காரை குட்டி பவானி முதன்முறையாக யாரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் தெரியுமா.? இணையதளத்தில் பட்டையை கிளப்பும் புகைப்படம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மற்றொரு ஹிட் படமாக மாறிய திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து பின்னிப் பெடல் எடுத்தார். மேலும் இவருடன் சேர்ந்து விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன், சஞ்சீவ் , ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் போன்ற பல நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருந்தது.

அதோடு இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வசூலிலும் 250 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. அதோடு மட்டுமில்லாமல் OTT தளத்திலும் இந்த திரைப்படம் வெளியாகி நல்ல லாபத்தைப் பார்த்தது.

இதில் நடித்த பலரும் தற்போது தமிழ் சினிமாவில் பல்வேறு படைப்புகளை பற்றி நடித்து வருகின்றனர். அந்த வகையில் மாஸ்டர் மகேந்திரன் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் மாஸ்டர் மகேந்திரன் புதிதாக ஒரு கார் ஒன்றை வாங்கியுள்ளார் அதை விஜய் சேதுபதியிடம் எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார். மேலும் விஜய் சேதுபதியிடம் அந்த காரை ஓட்டச் சொல்லியுள்ளார். பிறகு அந்த காரோடு இருவரும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய பவானி என்று கெத்தாக பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் லைக்குகளை அள்ளி வருகிறது.

Leave a Comment