காஜல் அகர்வாலின் புதிய படத்தை தட்டிபறித்த பிரபல நடிகை.? ஏன் காஜல் விலகினார் தெரியுமா.? முழு தகவல் இதோ.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். ஹிந்தி சினிமாவில் மூலம் அடி எடுத்து வைத்தாலும் அவருக்கு அதிகப்படியான வாய்ப்புகளை கொடுத்து அழகு பார்த்தது என்னுமோ  தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா தான்.

இருப்பினும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது கவர்ச்சி மற்றும் திறைமையை காட்டி நடித்ததால் வெகு விரைவிலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்த அதோடு அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் டாப் நடிகர்களுடன் நடித்து அசத்தினார். இதனால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் மேலும் பட வாய்ப்பை அள்ளிக் கொடுத்தனர்.

ஆனால் வயசு ஏற ஏற ஏறிக்கொண்டே போனதால் சினிமா சற்று தள்ளிவைத்து கல்யாணமும் விஷயத்தில் ஈடுபட்டார். காஜல் அகர்வாலின்  நண்பரும் தொழிலதிபருமான கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணம் செய்துகொண்ட பிறகு தனது கணவரை அழைத்துக்கொண்டு ஹனிமூனுக்காக வெளிநாடு பக்கம் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவியது.

இது இப்படி இருந்தாலும் படவாய்ப்புகளும் ஒரு பக்கம் வந்த வண்ணமே இருந்தன அந்த காரணத்தினால் வெப்சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் சைடில் இருந்து கூறப்படுகிறது இதனால் இவர் பல படங்களில் ஒப்பந்தமாகி இருந்த நிலையில் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறாராம்.

அந்த வகையில் நாகார்ஜுனா நடிப்பில் தெலுங்கில் உருவாகி உள்ள கோஸ்ட் படத்தில் இருந்து நடிகை காஜல் அகர்வால் விலகி உள்ளாராம் அதுபோல தமிழில் ரவுடிபேபி என்னும் தலைப்பில் முதலில் காஜல் அகர்வால் தான் கமிட்டாகி இருந்தாராம் தற்போது அந்த காரணத்தினால் அவர் விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா அந்த படத்தில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment