குட்டி தல கேக் வெட்டி கொண்டாடும் மாஸ் வீடியோ.! வைரலாகும் பிறந்தநாள் கொண்டாட்டம்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது வசூல் மன்னனாக வலம் வருகிறார், அதைப்போல அஜித்தின் திரைப்படம் திரையரங்கிற்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும் அந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் கொண்டாடுவார்கள்.

தல அஜித் தற்போது நேர்கொண்டபார்வை இயக்குனர் வினோத் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அஜீத் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு ஏதாவது தகவல் கிடைக்குமா என காத்துக் கொண்டிருக்கிறார்கள், அதேபோல் ரசிகர்களுக்கு அஜித் பற்றிய செய்தி மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தில் ஏதாவது கொண்டாட்டம் என்றால் அதையும் கொண்டாடுவார்கள்.

அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார், ஆனால் தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக படப்பிடிப்பு நாட்களை தவிர மற்ற நாட்களில் ஒதுக்கி குடும்பத்திற்காக செலவிடுவார், எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் குடும்பத்திற்கு பிறகுதான் என பலமுறை கூறியுள்ளார்.

இந்த நிலையில் அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாளை தல அஜித் தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment