குட்டி நயன்தாரா அணிக்காவை அப்படியே காப்பி அடித்த புதிய முல்லை.! புகைப்படத்தை பார்த்து மெர்சல் ஆகும் ரசிகர்கள்.

பொதுவாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல பிரபலங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார்கள் அந்த வகையில் ஷாலினி முதல் மீனாவின் மகள் நைனிகா வரை பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்கள். அதேபோல் இவர்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல திரைப்படங்கள் மகத்தான வெற்றி கொடுத்துள்ளது.

அந்த லிஸ்டில் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். இவர் குழந்தை நட்சத்திரமாக 2010ஆம் ஆண்டு  கதை திருடனும் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக சினிமாவிற்கு அறிமுகமானார் அதன்பிறகு 2015ஆம் ஆண்டு என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

mullai

மலையாளத்தில் இதுவரை இவர் 10 திரைப் படங்களுக்கு மேல் நடித்துள்ள அனிகா சுரேந்திரன்.  சினிமாவில் முன்னணி நடிகர்களான மம்மூட்டி மோகன்லால் ஜெயராம் ஆகியோருடன் படத்திலும் நடித்துள்ளார். அதேபோல் அஜித்துடன் மீண்டும் விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்து  மொத்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

இவர் போட்டோ ஷூட் நடத்தி பலமுறை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அதேபோல் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் அளவிற்கு பல முறை போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதேபோல் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் நயன்தாரா போலவே போஸ் கொடுத்து இருப்பதால் ரசிகர்கள் இவரை குட்டி நயன்தாரா என அழைக்க ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும் நடிகை காவியாவும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

mullai

Leave a Comment

Exit mobile version