ஒரேடியாக உடல் எடையை குறைத்து சின்னத்தம்பி 2க்கு ரெடியான குஷ்பு மற்றும் பிரபு..! வெளிவந்த புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!

0

கடந்த 1991 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் சின்னத்தம்பி இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபு மற்றும் குஷ்பு ஆகிய இருவர்களும் இணைந்து நடித்துள்ளார்கள்.

இவ்வாறு மாபெரும் ஹிட் கொடுத்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர வேண்டும் என ரசிகர்கள் இயக்குனர்க்கு வேண்டுகோள் வைத்துள்ளார்கள். இன்நிலையில் உடல் எடை அதிகமாக  வைத்திருந்த குஷ்பு சில நாட்களுக்கு முன்பாக தீராத உடற்பயிற்சி மூலமாக 18 வயது இளம்பெண் போல காட்சி அளித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போனது மட்டுமல்லாமல் இந்நிலையில் நடிகர் பிரபுவும் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்துக் கொண்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர் ஒருவர் நமது இயக்குனரிடம் சின்னதம்பி 2 திரைப்படத்தை இயக்க வேண்டும்  என கூறி உள்ளார்.

kushpu-1
kushpu-1

இதற்கு நமது நடிகை குஷ்பூ எனக்கு சம்மதம் என்ற வகையில் ஒரு  ஏமோஜி ரியாக்ஷனை வெளியிட்டிருந்தார். இவ்வாறு ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து தமிழ் சினிமாவையே கலக்கி இருந்தார்கள் இந்நிலையில் மறுபடியும் ஒன்று சேர்ந்தால் வேற லெவல் தான் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.

kushpu-2
kushpu-2

அப்படி மட்டும் இத்திரைப்படம் வெளிவந்து விட்டால் மறுபடியும் குஷ்பு மற்றும் பிரபு ஆகிய இருவரும் முன்னணி நடிகர்களாக வலம் வந்தால் கூட ஆச்சரியம் கிடையாது ஏனெனில் அந்த அளவிற்கு தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு இரண்டு பேரும் முன்னணி நடிகர்கள் போல காட்சி அளித்து வருகிறார்கள்.