சமந்தாவின் “குஷி” திரைப்படம்.. முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

kushi
kushi

kushi movie : தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வருபவர் சமந்தா இவர் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருவதால் அவருடைய மார்க்கெட் குறையவே இல்லை. இருப்பினும் இவர் கடைசியாக நடித்த சாகுந்தலம் திரைப்படம் சுமாராக ஓடியது.

இதிலிருந்து மீண்டு வர ஷிவா நிர்வாணா இயக்கத்தில்  விஜய் தேவர கொண்டா  இணைந்து சமந்தா நடித்துள்ள திரைப்படம் குஷி. இவர்களுடன் இணைந்து  லட்சுமி, ரோஹினி, முரளி சர்மா, சரண்யா பொன்வண்ணன், sachin khedekar மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படத்தில் ரொமான்டிக்,  காதல் சீன் போன்றவை நன்றாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் பார்த்ததையே திரும்ப பார்ப்பது போல் இருக்கிறது இதனால் குஷி படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதனால் நிச்சயம் படம் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் படம் வெளியாகி ஒரு நாள் முடிந்த நிலையில் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளிவந்திருக்கிறது அதன்படி பார்க்கையில் சமந்தாவின் குஷி திரை படம் முதல் நாளில் உலக அளவில் சுமார் 20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

தமிழகத்தில் மட்டும் குஷி திரைப்படம் ஒரு கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது வருகின்ற நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் குஷி படத்தின் வசூல் குறைய போவதில்லை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது இதனால் சமந்தா செம்ம குஷியில் இருக்கிறார் இந்த படத்தை தொடர்ந்து பல வேறு முன்னணி நடிகர்களின் படங்களிலும் சமந்தா நடிக்க இருக்கிறாராம்.