கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ‘குஷி’ படத்தின் 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

Kushi Movie: விஜய் தேவரகொண்டா சமந்தா இணைந்து நடித்த குஷி திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். அப்படி இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்கு அறிமுகமாகி 10 வருடங்களுக்கு மேலாக கொடிக்கட்டி பறந்து வருகிறார் சமந்தா. இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த சமந்தா புஷ்பா படத்தில் இடம் பெற்றிருந்த ஊ சொல்றியா பாடலுக்கு ஐட்டம் நடனமாடி அனைவரையும் பிரம்மிக்க வைத்தார்.

இதில் இவருடைய நடனம் கவர்ச்சியாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளியான சாகுந்தலம் படம் தோல்வியை அடைந்த நிலையில் தற்பொழுது விஜய் தேவரகொண்டானுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படி குஷி படம் வெளியாகி இரண்டு நாட்களை கடந்திருக்கும் நிலையில் இந்த படத்தினை சிவா நிர்வாணா என்பவர் இயக்கி உள்ளார்.

சமந்தா, விஜய் தேவரகொண்டானை தொடர்ந்து இந்த படத்தில் லட்சுமி, ரோஹினி, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன், Sachin Khedekar உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். கலவை விமர்சனத்தை பெற்ற குஷி படம் ரசிகர்கள் சிலரை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

இந்நிலையில் குஷி வெளிவந்து இரண்டு நாட்களை கடந்து இருக்கும் நிலையில் உலகளவில் ரூபாய் 45 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இந்த வாரம் முடிவில் கண்டிப்பாக ரூபாய் 60 கோடிக்கு மேல் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.