நாலா பக்கமும் பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. குஷ்பூ-சுந்தர் சி இத்தனை கோடிக்கு அதிபதியா?

Kushboo – Sundar C Net worth: கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திரை துறையில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் குஷ்பூ. தனது சிறந்த நடிப்பு, கொழு கொழுவென வசீகரமான தேகம் போன்றவற்றால் எனக்கென்று ரசிகர்களை கட்டிப்போட்ட குஷ்பூ தர்மத்தின் மேல் தலைவன் படத்திலிருந்து தொடங்கி 16 வருடங்களாக முன்னணி நடிகையாக தமிழ் திரைவுலகில் கலக்கினார்.

ஒரு கட்டத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து நாயகி ஆகவும் மற்றும் குணசத்திர நடிகையாகவும் 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நீடித்துள்ளார்.

வளர முடியாமல் தத்தளித்த 5 நடிகர்களை தூக்கிவிட்ட விஜயகாந்த்.. சூர்யாவுக்கு பக்கபாலமாக நின்ற கேப்டன்

சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வந்த குஷ்பூ ஒரு கட்டத்தில் தொகுப்பாளினியாகவும் ரியால்டி ஷோக்களின் நடுவராகவும் விளம்பர படங்களில் நடித்தும் வருகிறார். அரசியலில் ஈடுபட்ட பிறகு பல விவாதங்களில் மாட்டிக்கொண்டு இவர் மீது சர்ச்சை எழுவது வழக்கம்.

இவ்வாறு இது ஒருபுறம் இருக்க 2000ம் ஆண்டு சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஆரம்பத்தில் சென்னை போட் கிளப்பில் வசித்து வந்த குஷ்பூ தற்பொழுது கணவருடன் சென்னை செந்தோமில் வசித்து வருகிறார்.

கார்த்தியின் ஜப்பான் படத்தினால் தயாரிப்பாளருக்கு இத்தனை கோடி நஷ்டமா? சாட்டிலைட் உரிமையும் விற்கப்படாத சோகம்..

மேலும் டொயோட்டா பார்ச்சூர் மற்றும் மாருதி ஸிவிப்ட் போன்ற கார்களை வைத்திருக்கும் குஷ்பூ மொத்தம் 98 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து வைத்துள்ளாராம். மேலும் தனது கணவர் சுந்தர் சியுடன் இணைந்து அவுனி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களையும் இயக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதேபோல் தொடர்ந்து கமர்சியல் படங்களின் மூலம் ஹிட் கொடுத்து வரும் சுந்தர் சி-யின் சொத்து மதிப்பு 120 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவர் கலகலப்பு, அரண்மனை போன்ற திரைப்படங்களின் மூலம் மெகா ஹிட் கொடுத்துள்ளார். எப்பொழுது மிகவும் சிம்பிளாக அமைதியாக இருப்பது சுந்தர் சி- யின் குணாதிசயம்.

Exit mobile version