தமிழ் சினிமாவில் என்பது 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ இவர் முன்னணி நடிகர்களாக வளம் வந்த ரஜினி சரத்குமார் பிரபு ஆகியோர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். தொலைக்காட்சிகளில் நடுவராக பங்கேற்றுகிறார் அது மட்டும் இல்லாமல் சினிமாவை தயாரிப்பதிலும் அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார்.
குஷ்பு மற்றும் சுந்தர்சி இருவரும் திருமணத்திற்கு பிறகு மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் இந்த தம்பதிக்கு அவந்திகா அனந்திக்கா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா சினிமாவில் நடிப்பதற்காக லண்டன் சென்று பயிற்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார் விரைவில் இவர் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்.
அதேபோல் குஷ்புவின் இளைய மகள் அனந்திக்கா விரைவில் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் குஷ்பு மட்டுமல்லாமல் அவரது இரண்டு மகள்களும் தற்பொழுது முழுவதுமாக உடல் எடையை குறைத்து சினிமாவில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்ட இருக்கிறார்கள். மிகவும் ஸ்லிம்மாக மாறி உள்ள குஷ்புவின் மகள்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் குஷ்பூ தன்னுடைய மூத்த மகள் அவந்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் அவந்திகாவின் முடி நிறம் மாறி ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹீரோயினாக அவதாரம் எடுக்கப் போகிறார் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்.
