தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பூ, இவர் ரஜினி, கமல், சரத்குமார், சிரஞ்சீவி, என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர், தற்பொழுது இவர் படம் மற்றும் சீரியலை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார், இந்த ஜோடிக்கு இரண்டு பெண்கள் குழந்தைகள் உள்ளன, குஷ்பு சமீபத்தில் பேஸ் ஆப் மூலம் வயதான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார், அந்த புகைப்படம் ரசிகரிடம் வைரல் ஆனது.

இந்த நிலையில் தற்போது க்ளோசப் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வருகிறார்கள்.
