இணையத்தில் கதகளி ஆடும் குருதி ஆட்டம் பட டீசர்..! அந்தக் கடவுளே வந்தாலும் தடுக்க முடியாது போல..!

kuruthi aattam movie teaser: தமிழ் திரையுலகில் பானாகாத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரை உலகில் அறிமுகம் ஆனவர்தான் நடிகர் அதர்வா.  இவர் பிரப முன்னாள் நடிகர் இதயம் முரளியின் மகன் ஆவார்.

இவ்வாறு பானா காத்தாடியை தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்திருந்தாலும் சொல்லும்படி இவர் பிரபலம் ஆகவில்லை இந்நிலையில் ரசிகர் மத்தியில் இவர் மிகப் பிரபலமாக ஒரு திரைப்படம் என்றால் அது இமைக்க நொடிகள் திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக இவர் எளிதில் பிரபலமானது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற ஆரம்பித்தார் அந்த வகையில் தற்சமயம் ருக்குமணி வண்டி வருது,  ஒத்தைக்கு ஒத்த, தள்ளிப்போகாதே ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அதர்வா நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் குருதி ஆட்டம் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.  மேலும் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை ராதிகாவும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

என்னதான் திரைப்படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் திரைப்படத்திற்கு இசை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் பிரமாண்ட இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இந்த திரைப்படத்தில் இசையமைத்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த பிரமாண்டமான திரைப்படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அவர்கள் தான் இயக்கி உள்ளாராம்.

தற்சமயம் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தில் டீசர் சமீபத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.

Leave a Comment