கிளைமாக்ஸில் 18 யானைகள் மிரள வைக்கும் கும்கி 2..!! இதோ மாஸ் அப்டேட்..

0
kumki 02
kumki 02

2012ஆம் ஆண்டு வெளிவந்த கும்கி திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இப்படத்தை பிரபு சாலமன் இயக்க, லிங்குசாமி தயாரித்து இருந்தார். ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் இப்படத்தை  பாராட்டி வந்தார்கள்.

இப்படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாகவும் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனனும் நடித்திருந்தார். நடிகை லட்சுமிமேனன் இத்திரைப்படத்தின் மூலம் தான் தனது முத்திரையை சினிமாவில் பதித்தார். இவர்களைத் தொடர்ந்து காமெடி நடிகராக தம்பி ராமையா, அஸ்வின் ராஜ் போன்ற பலர் இணைந்து நடித்திருந்தார்கள்.

இப்படத்தின் திரைக்கதை மட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்தவகையில் இப்படத்தின் பாடல்களை இசையமைப்பாளரான டி இமான் இசையமைத்திருந்தார்.

இவ்வாறு ஹிட்டடித்த ஒரு திரைப்படம் எப்பொழுது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து வந்தார்கள். அந்த வகையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கும்கி 2 திரைப்படத்தை பிரபுசாலமன் உருவாக்க உள்ளார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 80 % முடிந்துவிட்டது என்றும் இன்னும் 20% இன்னும் எஞ்சி உள்ளது என்றும் பிரபுசாலமன் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரபுசாலமன் ஒரு பேட்டியில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு மே அல்லது ஜூன் மாதம் விடுமுறை நாட்களில் இப்படம் ரிலீசாகும் என்றும் கும்கி 2 திரைப்படத்தின் கிளைமேக்ஸில் 18 யானைகளை வைத்து எடுத்திருக்கிறாராம்.

எனவே இதனைப் பார்த்த பலரும் பிரபுசாலமன் படம் கண்டிப்பாக வெற்றி உண்டு என்றும் கூறி வருகிறார்களாம். அது மட்டுமல்லாமல் இப்படம் உண்மை சம்பவத்தை வைத்து தழுவிய படம் என்றும் கூறப்படுகிறது.

kumki 2
kumki 2

எனவே 18 யானைகளையும் கிளைமாக்ஸ் காட்சியை வைத்து எடுக்கப்பட்ட கும்கி 2 பீதியை கிளப்பும் என்ற தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.  இந்த அப்டேட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

பிரபுசாலமன் இதற்கு முன்பு இவர் தயாரித்த அனைத்து படங்களுமே தோல்வியடைந்த நிலையில் கண்டிப்பாக இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது. தற்போது பிரபுசாலனின் இந்தப் படம் வெற்றி ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.