பாண்டியன் ஸ்டோர் பிரபலத்தின் வீட்டில் கொரோனா.! அதிர்ச்சியில் சீரியல் குழு

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் ஸ்டாலின் சுஜித்தா, குமரன், வெங்கட் ,ஹேமா, காவியா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்பொழுது இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் குமரன்.

இவர் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கொரோனாவின் இரண்டு, மூன்றாவது அறை வேகமாக பரவி வருவதால் தற்போது பட சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இவரின் அப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அதாவது இவர் தனது சோஷியல் மீடியாவில் இந்த தகவலை பதிவு செய்துள்ளார்.  இதன் காரணமாக இவரும் தனிமையில் இருந்து வருகிறாராம்.  எனவே விரைவில் குணமடைந்து மீண்டும் வருவேன்.  அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

இந்த பதிவினை பார்த்த குமரனின் ரசிகர்கள் கண்டிப்பாக உங்கள் அப்பா மீண்டும் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து வருவார் என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version