குமார் சங்கராவின் பல நாள் இரவு தூக்கதை களைத்த நட்சத்திர பவுலர்.? இப்படி பல குடைச்சல் குத்து இருக்காராம்..

இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்ககாரா உலக அளவில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் விக்கெட் கீப்பர் ஆகவும் வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் விளையாடுகின்ற காலத்தில் இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு பவுலர் மட்டும் மிகவும் பயந்து கொண்டே இருந்ததோடு இரவில் பலநாள் தூக்கத்தை கெடுத்து உள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சங்ககாரா தெரிவித்தார். அவர் யாரென்றால் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாகவும் மிகச் சிறந்த ஸ்பின்னராக வலம்வந்த அணில் கும்ப்ளே தான்.

ஏனென்றால் கும்பளே எப்பொழுதும் பந்தை திருப்ப மாட்டார் அதற்கு பதிலாக நேராக வரும் ஆள் உயரமாக இருப்பதால் அவர் போடும் பந்து மிக துல்லியமாக வரும் இதனால் பந்தில் ரன் அடிப்பது மிக சிரமமாக இருக்கும் மேலும் சரியாக விளையாடாமல் மிஸ் செய்து விட்டால் விக்கெட்டை பறிகொடுக்க நேரிடும்.

அப்படி எனக்கு மிகப்பெரிய குறைச்சலாக அப்போதைய காலகட்டத்தில் இருந்தார் என வெளிப்படையாக கூறினார் மேலும் கும்பளே எப்பொழுதும் வெற்றியை பெறும் நோக்கில் தான் ஒவ்வொரு பந்தையும் போடக்கூடியவர் அவரிடம் நாம் அவ்வளவு எளிதில் ஜெயித்த விட முடியாத ஒரு பவுண்டரி சிக்சர்கள் போனால்கூட சரி வெற்றி இலக்கு என்ன என்பதை சரியாகப் புரிந்துகொண்டு பந்துவீச கூடிய திறமையான பவுலர் என குறிப்பிட்டார்.

anil kumble
anil kumble

அவர் பாகிஸ்தான் அணி உடனான போட்டி ஒன்றில் 10 விக்கெட்டுகளை மிக நேர்த்தியான முறையில் எடுத்து இருந்தார் அப்போது எங்களுக்கு தெரிந்துவிட்டது கும்பளேவை சமாளிப்பது சாதாரண விஷயமல்ல என்று அவர் ஒரு காலகட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்ததோடு தற்போதும் கோச்சாக இருந்து கொண்டு பல இளம் வீரர்களுக்கு தனது பயிற்சியைக் கொடுத்து வருகிறார் என கூறி அவரை புகழ்ந்து தள்ளினார் சங்ககாரா.

Leave a Comment