சினிமாவில் சேர ஹோட்டலில் எச்சில் இலை எடுத்த குள்ளமணி.! 500 படத்தில் நடித்தும் கடைசி காலத்தில் அனாதையாக சென்ற அவல நிலை.!

kullamani
kullamani

Kullamani : பொதுவாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அழகான தோற்றம், உயரம், முகத்தில் கலை என அனைத்தும் இருக்க வேண்டும் ஆனால் குறைவான உயரம் சுமாரான அழகு என இருந்தாலும் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் குள்ளமணி இவர் தன்னுடைய காமெடியாள் ஓரளவு ரசிகர்கள் மனதை வென்றார். நடிகர் குள்ளமணி புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு கிராமத்தில் பிறந்தவர்.

சிறு வயதிலிருந்து வறுமையால் வாடி தவித்தார் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது சினிமாவில் அதிக ஆர்வம் அதனால் சிறு சிறு நாடக கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றார் உயரம் குறைவாக இருந்ததால் அவருக்கு ஏற்ற கதாபாத்திரத்தை நாடக குழுவினர் கொடுத்தார்கள். சினிமாவில் நடிக்க ஆர்வம் அதிகமாக இருந்ததால் தன்னுடைய 15 வயதிலேயே சென்னைக்கு வந்தார் இவர் சென்னையில் பல ஸ்டுடியோவில் ஏறி இறங்கினார் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அப்படி இருக்கும் நிலையில் கொண்டு வந்த காசும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது பிறகு பிரபல ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலைக்கு சேர்ந்தார் ஹோட்டலுக்கு வந்த எழுத்தாளர் தூயவன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது அவரிடம் தன்னுடைய சினிமா ஆசையை கூறியுள்ளார். உடனே அவர் உன்னை சினிமாக்காரர்களின் வீட்டில் வேலைக்கு சேர்த்து விடுகிறேன் அங்கிருந்து சினிமாவிற்கு முயற்சி செய் என கூறினார்.

அப்படிதான் தூயவன் ஜெய்சங்கர் வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டார் ஜெய்சங்கர் மற்றும் அவருடைய அம்மாவிடம் நல்ல பெயரை எடுத்தார் அதன் பிறகு சினிமாவின் ஆசை அதிகரித்தது அடிக்கடி ஜெய்சங்கர் அவர்களுடன் சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் குள்ளமணி தன்னுடைய ஆசையை ஜெய்சங்கர் அவர்களிடம் கூறியுள்ளார். அப்படித்தான் 1972 ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியாகிய நவாப் நாற்காலி என்ற திரைப்படத்தில் குள்ள மணிக்கு ஒரு சிறிய கதாபாத்திரத்தை பரிந்துரை செய்தார்.

இதுதான் குள்ளமணியின் முதல் திரைப்படம் அந்த திரைப்படம் கிடைப்பதற்கு கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆனது இதற்கிடையில் அவர் சிறு சிறு நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார் அதன் பிறகு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகிய வசந்தத்தில் ஒரு நாள் என்ற திரைப்படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து பாக்யராஜின் இன்று போய் நாளை வா விஜயகாந்தின் வெற்றி, நானே ராஜா நானே மந்திரி, அம்மன் கோயில் கிழக்காலே, என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அது மட்டும் இல்லாமல் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் அவருடைய காமெடி இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளது, பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் என்று குள்ளமணி கத்துவார். இந்த காமெடி இன்னும் ரசிகர்கள் மனதில் நின்று கொண்டிருக்கிறது மேலும் கமலஹாசனின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அதேபோல் ராம்கி நடிப்பில் வெளியாகிய ஆபாவாணன் இயக்கத்தில் இணைந்த கைகள் என்ற திரைப்படத்தில் வில்லனுக்கு அடியாளாக நடித்திருப்பார்.

அதன் பிறகு 1984 ஆம் ஆண்டு தன்னுடைய அத்தை மகளை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது சென்னையில் வசித்து வந்த குள்ளமணி ஜெய்சங்கரின் அம்மா புகைப்படத்துக்கு மாலை போட்டு வணங்கி வந்தாராம் இந்த அளவு பிரபலமாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ஜெய்சங்கரின் அம்மாதான் எனவும் அவர் அடிக்கடி கூறியுள்ளார்.

ஓரளவு வசதியாக இருந்த குள்ளமணி உடல்நலக் குறைவால் மருத்துவ செலவிற்காக பணங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது பிறகு பணம் இல்லாததால் அன்றைய காலகட்டத்தில் சங்கத் தலைவராக இருந்த சரத்குமார் தான் அவருக்கு உதவி செய்தார் இருப்பினும் 2013 ஆம் ஆண்டு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 25ஆம் தேதி காலமானார் சேர்த்து வைத்த மொத்த சொத்தையும் கடைசி காலத்தில் மருத்துவ செலவிற்காகவே செலவு செய்து வறுமையில் வாடியதாக கூறப்பட்டது. குள்ளமனியின் மறைவுக்கு பிரபலங்கள் கூட யாருமே வரவில்லையாம்.

குள்ள மணியின் மறைவிற்குப் பிறகு அவருடைய மனைவி மற்றும் மகள் சொந்த ஊருக்கே சென்று விட்டதாக கூறப்படுகிறது .