சிவாங்கியின் மீது கடும் கோபத்தில் தல அஜித்தின் ரசிகர்கள்.! எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் தளபதியின் கேப்ஷன்

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் சிவாங்கி.  இவர் நிகழ்ச்சியில் பேசும் பொழுது கீச்சு குரலால் பேசியதால் இவரை பலரும் கலாய்த்து வந்தார்கள் ஆனால் இவர் பாட ஆரம்பித்ததும் செட்டில் உள்ள அனைவரும் மெய்மறந்து பார்த்தார்கள்.

அந்த அளவிற்கு அவனது சிறந்த குரல் வளத்தால் அழகான பாடல் பாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் முற்றிலும் காமெடியை மையமாக வைத்து ஒளிபரப்புவது புகழ், பாலா,அஸ்வின், சிவாங்கி உள்ளிட்ட பலரும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்கள்.

அதோடு இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனைவிடவும்  2 சீசன் பட்டையை கிளப்பியது.2 சீசனில் சிவாங்கி அஸ்வினை சைட் அடிப்பது போல பல விஷயங்களை செய்ததால் இவர்களின் ஜோடி பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தார்கள்.

இந்நிலையில் அஸ்வின் மற்றும் சிவாங்கி இருவரும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து உள்ளார்கள். அதில் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது அதில் கடைசியாக தளபதி நடித்த படம் எது என்று கேட்டதற்கு மாஸ்டர் என்று தெரிவித்துள்ளார். பிறகு அஜித் கடைசியாக நடித்த படம் என்று கேட்டதற்கு விழிப்புணர்வோடு மட்டுமல்லாமல் அடுத்த படம் என்னவென்று கேட்டதற்கு பதில் அளிக்கவில்லை சிவாங்கி.

இப்படிப்பட்ட நிலையில் சில மாதங்களாக தல அஜித் வலிமை அப்டேட்டை கேட்டு அரசியல்வாதிகள்,திரை பிரபலங்கள் என்று அனைவரையும் பாடா படுத்தி வருகிறார்கள் தல அஜித் ரசிகர்கள் ஆனால் சிவாங்கிக்கு இது கூட தெரியவில்லை என்று அஜித் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சிவாங்கி ஆதரவாகவும், அஜித் ரசிகர்கள் சிவாங்கிக்கு எதிராகவும் ட்விட்டரில் சண்டை போட்டு வருகிறார்கள். இதற்கு சிவாங்கி தனது இன்ஸ்டாகிராமில்  Inhale positivity, Exhale negativity என்ற பதிவை போட்டுள்ளார்.

sivangi 2
sivangi 2

Leave a Comment