குக் வித் கோமாளி பவித்ரா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை பற்றி அவரே கூறிய தகவல்.!

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் தனது வசீகரமான தோற்றத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை  பவித்ரா.

இவர் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஆனால் எந்த திரைப்படமும் சொல்லும் அளவிற்கு இவருக்கு பிரபல தரவில்லை. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் 9 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். பொதுவாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வின்,சிவாங்கி, புகழ்,பாலா, பவித்ரா என பலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்தவகையில் பவித்ரா காமெடி நடிகர் சிவாவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இத்திரைப்படத்தை  ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் உல்லாசம் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ரசிகர் ஒருவர் அடுத்த திரைப்படம் என்ன என்று கேட்டதற்கு தெலுங்கில் Bilingual என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளேன் இத்திரைப்படத்தினை பற்றி அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார்.

இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கும் முன்பு சில குறும்படங்கள், ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து மாடலாகவும், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்றவற்றிலும் பங்கேற்று வந்தார்.

இவ்வாறு இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

Leave a Comment