குக் வித் கோமாளி பவித்ரா இப்படி ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளாரா.! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் இளம் நடிகர், நடிகைகள் திறமை இருந்தும் சினிமாவில் பிரபலமடையாமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அந்த வகையில் விஜய் டிவி தொடர்ந்து வித்தியாசமான பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிப்பரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்த ஒன்றுதான் குக் வித் கோமாளி.இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது .பிரபலமடைய முடியாமல் தவித்து வந்த பலரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்துள்ளார்கள்.

அதோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்பொழுது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் பவித்ரா இந்நிகழ்ச்சியின் சீசன் 2வில் கலந்துகொண்டு பட்டிதொட்டி பிரபலமடைந்து உள்ளார்.இவர் உல்லாசம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அஸ்வின் உள்ளிட்ட இன்னும் சில நடிகர்களுடன் தமிழிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஆனால் எந்த திரைப்படங்களும் இவருக்கு சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்த வகையில் ஏஜிஎஸ் புரோடக்சன் தயாரிக்க உள்ள திரைப்படமொன்றில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து மற்றொரு திரைப்படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்ற தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் வெளிவந்துள்ளது. இவர் நடிக்க உள்ள இந்த திரைப்படம் பைலட் சம்பந்தப்பட்ட ஒரு கதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பவித்ராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்று கூறி உள்ளார்கள்.

pavithra new movie
pavithra new movie

Leave a Comment