அழகு பதுமையாக இருக்கும் குக் வித் கோமாளி தீபா அக்கா.! இந்த புகைப்படத்தை யாராவது பார்த்துள்ளீர்களா.!

ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய டிஆர்பி இடத்தை முன்னிலையில் கொண்டு வர பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி எத்தனையோ டிவி சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்பி வருகிறார்கள்.

என்னதான் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி நாளும் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்டு வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதன் முதல் சீசன் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் அடுத்ததாக இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது. விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப பட்டாலும் இந்த நிகழ்ச்சிதான் டாப் லிஸ்டில் இருந்து வந்தது.

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சியை தான் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் அது தவிர்க்க முடியாத உண்மை. மேலும் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான மற்றும் பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள்  கலந்து கொண்டார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு நிகராக காமெடி செய்து வந்தவர்கள் என்றால் மதுரை முத்து மற்றும் தீபா தான்.

deeba
deeba

தீபா தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே பல திரைப்படங்களில் நடித்துள்ளார் மாயாண்டி குடும்பத்தார், வெடிகுண்டு முருகேசன் என பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது கார்த்தி நடிப்பில் வெளியாகிய  கடைக்குட்டி சிங்கம் தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியிலும் தன்னுடைய வெகுளித்தனமான நடிப்பை வெளிக் காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். அதேபோல் தீபாவின் கணவரும் பலரை கவர்ந்துள்ளார். இந்த நிலையில் தீபாவின்  திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் தீபா மிகவும் ஸ்லிம்மாக இருக்கிறார். இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

deeba
deeba

Leave a Comment