விஜய் மேனேஜரை வளைத்துப் போட்ட குக் வித் கோமாளி அஸ்வின்.!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். பொதுவாக இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுவிடும்.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. அந்த வகையில் மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை பூஜா ஹெக்டேக் நடித்து வருகிறார். இவர்களை தொடர்ந்து காமெடி நடிகர் யோகிபாபு மற்றும் டிக் டாக் பிரபலம் அபர்ணா தாஸ்  உள்ளிட்ட பிரபலங்களும் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது.தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்புகள் முடிந்து மீண்டும் சென்னை வந்துள்ளார்கள்.  இந்நிலையில் குக் வித் கோமாளி அஸ்வினுக்கு விஜய்க்கு இடையே இருக்கும் உறவு பற்றிய தகவல் தற்போது இணையதளத்தில்  வெளிவந்துள்ளது.

அதாவது விஜய்யின் மேனேஜர் மற்றும் விஜய் யாரை சந்திக்க வேண்டும் அப்படி யார் சந்தித்தாலும் இவரிடம் கேட்டு அதன் பிறகுதான் விஜயை சந்திக்க முடியுமாம். அவர்தான் ஜெகதீஷ் இவர் பல திரை பிரபலங்களுக்கு மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த  அஸ்வினின் பட வேலைகளை இனி இவர் தான் பார்க்க உள்ளாராம். அஸ்வின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தொடர்ந்து 4 திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.