அப்பவே “கமர்ஷியல் கிங்” என நிரூபித்த கே எஸ் ரவிக்குமார்.! ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 9 படங்கள்

KS Ravikumar : தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் வெற்றி கண்டு வருபவர் கே எஸ் ரவிக்குமார். இவர் சமீப காலமாக படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வரலாறு முக்கியம், கஸ்டடி படத்தை தொடர்ந்து கங்குவா மற்றும் அந்தகன்  படத்தில் டாக்டர் ஆகவும் நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட கேஎஸ் ரவிக்குமார் இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் அதுவும் இவர் எடுக்கும் கமர்சியல் படங்கள் காலங்கள் கடந்த பிறகும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது அதுவும் உச்ச நட்சத்திர நடிகர்களான ரஜினி, கமல், அஜித், சூர்யா, விஜய், சரத்குமார் போன்றவர்களை வைத்து இவர் எடுத்த கமர்சியல் படங்கள் ரசிகர்களுக்கு பேவரட்டாக இருந்து வந்துள்ளன அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

  1. கே எஸ் ரவிக்குமார் ரஜினியுடன் கூட்டணி அமைத்து முத்து, படையப்பா போன்ற கமர்சியல் படங்களை கொடுத்தார் இந்த படம் இரண்டுமே வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

2. உலக நாயகன் கமலஹாசன் உடன் கே எஸ் ரவிக்குமார் கூட்டணி அமைத்து அவ்வை ஷண்முகி, தசாவதாரம் படங்களை எடுத்தார். அவ்வை சண்முகி படத்தில் பெண் வேடமிட்டு நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்தார். தசாவதாரம் படத்தில் 10 வேடம் போட்டு நடித்து ரசிகர்களை மிரள வைத்தார் இந்த இரண்டு படங்களுமே வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

3. கே எஸ் ரவிக்குமார் அஜித்தின் திறமையை கண்டு தனது அடுத்த படங்களில் நடிக்க வைத்தார். அப்படி இவர் எடுத்த வில்லன், வரலாறு இரண்டிலுமே அஜித்தின் மாறுபட்ட நடிப்பு பலரையும் கவர்ந்து எடுத்தது படமும் வெளிவந்து அதிக நாட்கள் ஊதியத்தோடு மட்டுமல்லாமல் கமர்சியல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

4.கே எஸ் ரவிக்குமார், சூர்யா கூட்டணியில் உருவான திரைப்படம் ஆதவன் இந்த படத்தில் சூர்யா தனது அப்பாவை ரவுடிகள் இருந்து காப்பாற்றும் ஒரு கதை தான் படம் ஆக்ஷன், காமெடி என சிறப்பாக இருந்ததால் வெளிவந்து நன்றாக ஓடியதோடு மட்டுமல்லாமல் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

5. கே எஸ் ரவிக்குமார் விஜய் உடன் கூட்டணி அமைத்த திரைப்படம் மின்சார கண்ணா இந்த படம் முழுக்க முழுக்க ஆண்களை வெறுத்துவதுக்கும் குஷ்புவை எப்படி மாற்றுகிறார் விஜய் என்பதுதான் படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது.

6. சரத்குமாரின் நாட்டாமை மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படி சினிமா உலகில் கமர்ஷியல் படங்களை கொடுத்து  கிங் ஆப்தி கமர்ஷியல் டைரக்டராக இருந்து வருகிறார்.