தமிழ் சினிமாவில் அடிச்சி தூக்கிய கேஎஸ் ரவிகுமாரின் சிறந்த திரைப்படங்கள்.!

கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்குனராக அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்தவர். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 1990களில் குடும்ப படம் மற்றும் நகைச்சுவை படங்கள் எடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர். அத்தகைய சிறந்த படங்களை தரவரிசையில் காணலாம்.

1. வில்லன் – இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக தல அஜித் குமார் அவர்கள் நடித்துள்ளார். இத்தகைய திரைப்படம் ஆக்ஷன் கலந்த காமெடி படமாக அமைந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை சுமார் 6 கோடி செலவில் எடுத்த படம் ஆகும். வில்லன் படம் சுமார் 35 கோடி வருமானத்தை பெற்றது. இந்த திரைப்படத்தில் அஜித் குமார் அவர்கள் இரண்டு வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மீனா, கிரண் ராத்தோட், இவர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்கள்.

2. பஞ்சதந்திரம் – கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் நகைச்சுவை கலந்த படமாக அமைந்தது. பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கதாநாயகனாக கமலஹாசன் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படம் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

3.வரலாறு, இத்திரைப்படத்தில் அஜித் குமார் அவர்கள் மூன்று வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அஜித் குமார். அதுமட்டுமல்லாமல் வரலாறு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அஜித் அவர்களே நடித்திருந்தார். இந்தப் படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அசின் அவர்கள் நடித்துள்ளார். வரலாறு திரைப்படம் ஆக்ஷன் மட்டும் கொண்டு எடுத்த படமாகும். இந்த திரைப்படம் சுமார் 12 கோடி செலவில் எடுக்கப்பட்டது இத்திரைப்படத்திற்கு மொத்த வருமானம் 50 கோடி பெற்றுள்ளது.

4. தசாவதாரம்- கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் கமலஹாசன் பத்து வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் மக்களிடையே மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படத்தில் கமலஹாசனுக்கு உலகநாயகன் என்ற பட்டம் கிடைத்தது. கமலஹாசன் அவர்கள் திறமையை இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

5. படையப்பா- படம் கே எஸ் ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ஆக்ஷன் கலந்த காமெடி படமாக அமைந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் எமோஷனையும் காட்டியுள்ளார். ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

6. மின்சார கண்ணா – விஜய் நடிப்பில் உருவான மின்சார கண்ணா திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ஆக்ஷன் கலந்த காமெடி படமாக இயக்கினார். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் குஷ்பு, ரம்பா, மோனிகா, இவர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படமாகும்.

7. நட்புக்காக – கேஎஸ் ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. இந்தப்படத்தில் கதாநாயகனாக சரத்குமார் இரு வேடங்களில் நடித்துள்ளார். இந்த படம் நட்பை கருத்தில் கொண்டு எடுத்த படமாகும். சரத்குமார் மற்றும் விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நட்புக்காக இந்த படம் ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்ற படமாகும்.

8. பிஸ்தா – இந்த திரைப்படம் கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படமாகும் இத்திரைப்படத்தை கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்கியுள்ளார். பிஸ்தா படத்தில் கதாநாயகியாக நக்மா அவர்கள் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் வீட்டிற்கு அடங்காத பெண்ணாக இருக்கும் நக்மா. இவரைத் திருமணம் புரியும் கார்த்தி பின்னர் நடக்கும் திரைக்கதையில் நகைச்சுவையுடன் எடுக்கப்பட்ட படமாகும். பிஸ்தா திரைப்படம் ரசிகர்களின் முன்பு நல்ல வரவேற்பைப் பெற்றது.

9. அவ்வை சண்முகி – இத்திரைப்படத்தில் கதாநாயகனாக கமலஹாசன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்கியவர் கே எஸ் ரவிகுமார் அவர்களாவார். திரைப்படம் காமெடி படமாக அமைந்தது. இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மீனாவும் நடித்திருந்தார். இந்த படத்தில் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்திருந்தார்.

10. முத்து – கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த படமாகும். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்பாபு, ராதாரவி அவர்கள் நடித்துதிருந்தார்கள். இப்படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்திருந்தார் மீனா இவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம். இந்த படத்திற்கு சினிமா எக்பிரஸ் அவார்டு கிடைத்துள்ளது. வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ரகுவரன் நடிப்பு அசத்தலாக இருந்தது.

Leave a Comment