நடிகர் சூர்யாவுக்காக இப்படி ஒரு தரமான படத்தை கொடுக்க ஆசைப்பட்டவர் கே எஸ் ஆனந்த்.! தமிழ் சினிமாவில் யாரும் யோசிக்காத ஒன்று.

0

தமிழ் சினிமாவில் மக்கள் மற்றும் ரசிகர்களை கவரும்படியான என்டர்டைன்மென்ட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தன்னை பிரபலப்படுத்திய கொண்டவர் இயக்குனர் கே வி ஆனந்த். அத்தகைய படங்கள் ஒவ்வொன்றும் இவருக்கு நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தன.

இதனாலேயே இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இவர் சூர்யாவுடன் இணைந்து அயன், காப்பான் போன்ற அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் சூர்யா என்ற ஒரு நபரை உருவாக்கியவரும் இவர்தான்.

சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைப்பதற்கு முன்பாக ஒளிப்பதிவாளராகவும் புகைப்பட கலைஞராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது அப்படி இவர் சூர்யாவுக்கு எடுத்துக் கொடுத்த புகைப்படம் தான் சூர்யா சினிமாவில் காலூன்றி வைப்பதற்கு முக்கிய காரணம் அந்த புகைப்படம் தான் இவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு இவரே சூர்யாவை வைத்து அடுத்த ஹிட் படங்களை கொடுத்து சூர்யாவை வளர்த்துவிட்ட வரும் ஆவார்.

கே எஸ் தனது மூன்றாவது முறையாக சூர்யாவுடன் கூட்டணி அமைத்து ஒரு ஹாலிவுட் ரேஞ்சில் ஒரு படத்தை கொடுக்க கதையை ரெடி பண்ணிக்கொண்டு இருந்தார் ஆனால் இவர் மாரடைப்பு காரணமாக கே எஸ் ஆனந்த் உயிர் இழந்தார். அது நிறைவேறாமல் போனது அதில் மட்டும் சூர்யா நடித்து இருந்தால் தனது மார்க்கெட்டை வேற லெவல் கொண்டுபோய் சேர்த்திருப்பார் எனவும் கூறப்படுகிறது மேலும் இவரைப்போலவே நடிகர் சிம்புவுக்கும் ஒரு கதையை எழுதி வைத்திருந்தாராம் கே எஸ் ஆனந்த்.

கண்ணுக்கு தெரியாத பலரையும் சினிமா உலகில் வளர்த்துவிட நினைத்தவர் என்பது நாம் மறந்துவிடக்கூடாது இவரை போன்றவர்கள் சினிமாவில் இருந்தால் முகம் தெரியாதவர்கள் கூட தமிழ்சினிமாவில் உச்சத்தை தொட முடியும்.