வனிதா பீட்டர்பாலை பயங்கரமாக கலாய்த்த KPY பாலா!! வைரலாகும் வீடியோ.

0

kpy Bala fun with vanithapeterpal video: சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு காணாமல் போன பல நடிகைகள் உள்ளார்கள். அந்த வகையில் நடித்த ஒரு சில படங்களிலேயே பிரபலமடைந்த விட்டு திறையில் இருந்து காணாமல் போனவர் நடிகை வனிதா. இவர் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார்.

இந்நிலையில் விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இவரைப் பற்றி தெரியாதவர்கள் என்று எவருமில்லை. இவருக்கு இந்நிகழ்ச்சியின் மூலம் பல நெகட்டியு பெயர்கள் வந்தாலும் சில ரசிகர்கள் இவருக்கு என்று இருந்துதான் வருகிறார்கள்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இது வனிதாவின் மூன்றாவது திருமணம் இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளார்கள். ஆனால் மகன் இவரிடம் இருந்து பிரிந்துள்ளார் இரண்டு மகள்கள் தான் இவரிடம் உள்ளார்.

பீட்டர் பாலுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் திருமணம் செய்து கொண்ட நாட்களில் இவரைப் பற்றிதான் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது பல திரை பிரபலங்களும் இவர்களைப் பற்றிக் கூறி வந்தார்கள். தற்பொழுதுதான் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து விஜய் டிவி வனிதாவை ஆதரித்து வருகிறது. அந்த வகையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இதனைத் தொடர்ந்து சில காமெடி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வரும் வனிதா நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த நம்மவர் கமல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அதில் விஜய் டிவியில் சில வருடங்களாக காமெடியில் கலக்கி வரும் கே பி ஒய் பாலா வனிதாவை வச்சு செஞ்சி பங்கமாக கலாய்ப்புத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங் இருந்து வருகிறது. இதோ அந்த வீடியோ.