சொம்பு அடிக்கிறவனை வடிவேலு கூடவே வச்சுப்பாரு.. மறைந்த நடிகர் விவேக் பற்றி வெளிப்படையாக பேசிய கொட்டாச்சி

Vadivelu : தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கும் நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது கவுண்டமணி செந்திலை தொடர்ந்து தற்பொழுது தவிர்க்க முடியாத ஒரு காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலு. இவர் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே   படத்தின் மூலம் தான் வடிவேலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு சின்ன கவுண்டர், சிங்காரவேலன், தேவர்மகன், காதலன், காதல் தேசம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார் 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன், எலி போன்ற படங்கள் வெற்றி பெற்றெடுத்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

விஜயகாந்த் செய்த மிகப்பெரிய 2 தவறுகள்.. முக்கிய பிரபலம் சொன்ன தகவல்

சினிமா உலகில் பேரையும், புகழையும் சம்பாதித்த வடிவேலு எப்பொழுதுமே தன்னுடன் ஒரு கேங்கை வைத்து கொண்டு தான் ஓடுவார் அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பார்.  அதுவும் தன்னைவிட ஒரு படி மேலே போகக்கூடாது என்பதில் முக்கியமாக கண்காணித்துக் கொண்டே இருப்பார் மேலும் யாருக்கும் அதிகமாக உதவி செய்ய மாட்டார்.

மேலும் யாருடைய இறப்புக்கும் அவர் சென்றது இல்லை கடைசியாக கூட விஜயகாந்த் உடலுக்கு  அவர் அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட வடிவேலின் மீது ரசிகர்களும் சரி, சினிமா பிரபலங்களும் கோவத்தில் இருக்கின்றனர் இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் கொட்டாச்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்து பேசி உள்ளார்.

உதவி இயக்குனர்களுக்கு 5000 சம்பளமா.. சூப்பர் ஸ்டார் ரஜினி எடுத்த அதிரடி முடிவு ஆடி போன உதவி இயக்குனர்கள்..

அவர் சொன்னது வடிவேலுக்கு யார் கைதட்டுறாங்களோ அவங்கள வச்சு தான் கூட வச்சிருப்பாரு அவருக்குன்னு ஒரு கேங் இருக்கு அவங்கள தவிர வேறு யாருடனும் அவர் நடிக்க மாட்டார். ஆனால் விவேக் சார் அப்படி இல்லை யாரையும் தனிச்சி ஒதுக்கவே மாட்டார் அவர்களுக்கு ஒரு குடும்பம் இருக்கு நம்ம பிரிச்சு ஒதுக்கீட்டா அவன் குடும்பத்துக்கு எப்படி பசியாற்றுவான் என நினைப்பார்.

வடிவேலு பொருத்தவரை அவரைவிட யாரும் சிறப்பாக நடித்து விடக்கூடாது மீறி நடித்தால் ரீ டேக் சொல்லிவிட்டு அந்த நபரை அடித்து பின்னால் போய் நிற்க சொல்வார் இதுதான் வடிவேலு என தன் ஆதங்கத்தை கூட்டி தீர்த்து உள்ளார் காமெடி நடிகர் கொட்டாச்சி

Exit mobile version