ஊர்ல வாழ்கிற வரைக்கும் ஆடுறது நாமளா தான் இருக்கணும்.! வைரலாகும் கொம்பு வச்ச சிங்கமடா ட்ரெய்லர்.!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் பெரும்பாலும் தனது படங்களை தானே இயக்கி நடித்து வருபவர். மேலும் சசிகுமார் திரைப்படத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்துவருகிறது. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார். அதேபோல் சசிகுமார் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் நாடோடிகள் 2. இதற்கு முன் சசிகுமார் நடிப்பில் வெளியாகிய நாடோடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.

அப்படி இருக்கும் வகையில் சசிகுமார் தற்பொழுது மற்ற இயக்குனர்களின் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆரம்பித்துள்ளார். இந்தநிலையில் சசிகுமார் தற்போது எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய் ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் படபிடிப்பு பணிகள் முடிவடைய இருக்கின்றன இந்த நிலையில் விரைவில் post-production பணிகள் தொடங்க இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உடன்பிறப்பு என்ற திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் சசிகுமாரின் அடுத்த திரைப்படமாக கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தை சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கிய சுந்தரபாண்டியன் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் சூரியன், மறைந்த இயக்குனர் மகேந்திரன், ஹரிஷ் பெறடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த ட்ரெய்லர்.

Leave a Comment