வசூலில் புதிய மைல்கல்லை தொட்ட கோமாளி.! ஜெயம் ரவி திரைப்பயணத்தில் இதுதான் அதிக வசூலாம்.!

0

நடிகர் ஜெயம்ரவி சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் கோமாளி, இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து காஜல் அகர்வால் யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளார்கள்.

படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் இயக்கியுள்ளார், 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளைஞன் மீண்டு வரும் பொழுது இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை ஆச்சரியத்துடன் பார்ப்பதுதான் இந்த கோமாளி. இந்த திரைப்படம் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்று வருகிறது.

இது நிலையில் வசூல் நிலவரம் பற்றி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, 6 நாட்கள் முடிவில் தமிழக அளவில் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜெயம் ரவி திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படத்தில் இந்த திரைப்படம் தான் முதலிடத்தை பெற்றுள்ளதாம், இந்தநிலையில் ஹிப்ஹாப் ஆதி இசையில் கோமாளி படத்தில் இடம்பெற்றுள்ள பைசா நோட்டு பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

இதை இணையதளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளார்கள் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.