வருகின்ற காலகட்டத்தில் கோலி, ரோகித் இந்த இடத்தை நிரப்ப.. இந்த வீரர்கள் சரியாக இருப்பார்கள்.! ஓபன்னாக பேசிய ரிக்கி பாண்டிங்.

இந்தியாவில் கிரிக்கெட் பார்ப்பவர்களும் சரி கிரிக்கெட் ஆடும் அவர்களும் சரி அதிகமாக இருக்கின்றனர் என்று தான் கூறவேண்டும் ஆம் இப்போது ஐபிஎல் வேறை வந்துவிட்டதால் இளம் தலைமுறை வீரர்கள் தனது திறமையை வெளிக்காட்டி வெகு விரைவிலேயே இந்திய அணியில் இடம் பிடித்து விடுகின்றனர்.

அதிலும் சமீபகாலமாக சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு இளம் வீரர்கள் இந்திய அணியில் அதிகமாகி உள்ளதால் வாய்ப்பு கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. அதை ஏற்றார் போல சமீபத்தில் நடந்த இந்தியா, நியூசிலாந்து தொடரில் கூட ஆகி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அசத்தியது.

இப்படி இருக்கின்ற நிலையில் ரிக்கி பாண்டிங் சமீபத்திய பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதில் பல்வேறு விதமான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது அப்போது பேசிய அவர் டெல்லி கேப்பிடல் அணியின் பயிற்சியாளராக இருந்தேன் அப்பொழுது அவர்களின் திறமையை பார்த்து விட்டு இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை கொடுக்க முயற்சித்தனர்.

ஆனால் நான் தான் வேண்டாம் என்று கூறிவிட்டேன் ஏனென்றால் மனைவி மற்றும் குடும்பத்துடன் நீண்ட நேரம் செலவிட முடியாது என்ற காரணத்தினால் அதை நிராகரித்தார் கூறினார் மேலும் பேசினார் அப்போது அவரிடம் ரோகித் கோலி ஆகியோர்களை தொடர்ந்து அந்த இடங்களை பிடிக்க கூடியவர்களாக இருப்பார்கள் யார் என கேட்டுள்ளனர் அதற்கு பேசிய ரிக்கி பாண்டிங் இந்தியாவில் இளம் தலைமுறை வீரர்கள் நிறைய பேர் உள்ளனர்.

எனது கணிப்பில் நான் ஒரு சில வீரர்களை கண்டுபிடித்துள்ளேன் அவர்கள் ருத்துராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், தேவ்தத் படிக்கல், பிரித்திவி ஷா, ஜெய்ஸ்வால் போன்றவர்கள் நிச்சயம் எதிர்காலத்தில் சிறந்த வீரர்களாக வருவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இளம் தலைமுறை வீரர்கள் அடுத்தடுத்து உருவாகுவதால் இந்திய அணியில் டாப் வீரர்களின் இடத்தை அவர்கள் சரியாக பிடித்து பயணிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Exit mobile version